Pages

Thursday, January 9, 2014

நஷ்டம் இல்லாத தொழில் வாய்ப்பு

எனது குறிப்பு: இந்த தொழில் வாய்ப்பு என்னைப் பொறுத்தவரை மிகவும் அரியதாகவே தோன்றுகிறது. வரும் காலத்தில் இதன் வளர்ச்சி மிகவும் பெரியதாக இருக்கப் போகிறது. எனவே, இந்த பக்கத்தை மிகவும் கவனமாக படியுங்கள். (நான் உங்களை என்னுடன் இணையுங்கள் என்று வற்புறுத்தப் போவதில்லை. ஆனால் இது எவ்வளவு தூரம் உங்களுக்கு பயன்படும் என்பதை கவனிக்காமல் போய்விடாதீர்கள் என்று வற்புறுத்த விரும்புகிறேன்.)

1. இது என்ன விதமான தொழில் வாய்ப்பு?
நல்ல நேரடியான கேள்வி. இது "நேரடி வர்த்தகம்" என்ற வகையான தொழில் வாய்ப்பு. இதனை "நெட்வொர்க் மார்க்கெட்டிங்" அல்லது "மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங்" என்றும் கூறலாம்.

2. ஆஹா... MLM-ஆ? அதுபற்றி நான் பல மோசமான கதைகளை கேட்டிருக்கிறேனே !!
இருக்கலாம். ஏனென்றால் பல மோசடி நிறுவனங்கள் இந்த முறையைப் பின்பற்றி மக்களை ஏமாற்றி இருக்கிறார்கள். அதனால் எல்லா நிறுவனங்களையும் அப்படி கருத முடியாது.

இந்த மோசடி நிறுவனங்களில் 90%-க்கு மேற்பட்ட நிறுவனங்கள் MLM என்ற வரையறைக்குள்ளேயே வராதவை. MLM என்றால் நுகர்வோர் கொடுக்கும் பணத்திற்கு ஈடாக ஏதாவது பொருள் கொடுக்கவேண்டும். ஆனால் இந்த மோசடி நிறுவனங்கள் வெறும் பணத்தை மட்டுமே கையாள்பவை. புதிய உறுப்பினர்களிடமிருந்து பெறும் பணத்தை பழைய உறுப்பினர்களுக்கு வருமானம் என்ற பெயரில் வழங்கி, கடைசியில் பெரும்பணத்தோடு தலைமறைவு ஆவது அவர்கள் ஸ்டைல். அவற்றை "முதலீடு நிறுவனங்கள்" (ஆங்கிலத்தில் High Yield Investment Programs - HYIP என்று கூறுவதுபோல்) என்று கூறலாமே ஒழிய, MLM என்று கூற இயலாது. "நிதி நிறுவனம்" என்று கூறிக் கொண்டால் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளிலிருந்து தப்பிக்கவே தங்களை MLM என்று கூறிக் கொள்கின்றன.

நான் கூறும் நிறுவனத்தில் உறுப்பினர்கள் கொடுக்கும் பணத்திற்கு மிகவும் தரமான, நாம் அன்றாடம் பயன்படுத்தும் சோப், டூத்பேஸ்ட், டீ, காபி, பாடி ஸ்ப்ரே, டால்கம் பவுடர், ஷாம்பூ போன்ற பொருட்கள் வழங்குவதால் அந்த பயம் நமக்குத் தேவையற்றது.

3. MLM நிறுவனங்கள் என்றாலே "அதிக விலை" என்று பயமாக இருக்கிறதே !!
நான் கூறும் நிறுவனத்தைப் பொறுத்தவரை இந்த பயமும் தேவையற்றது.

உதாரணமாக -

250 கிராம் டீ (அதுவும் லீஃப் டீ) விலை வெறும் ரூ.85 மட்டுமே.
100 கிராம் சோப் (அதுவும் கிரேடு 1 சோப்) விலை வெறும் ரூ.30 மட்டுமே.
150 மிலி. வாசனை ஸ்ப்ரே (அற்புதமான மணம்) விலை வெறும் ரூ.150 மட்டுமே.
100 கிராம் டால்கம் பவுடர் விலை வெறும் ரூ. 45 மட்டுமே
100 கிராம் டூத்பேஸ்ட் விலை வெறும் ரூ.55 மட்டுமே.

நான் கூறும் நிறுவனத்தில் 45க்கும் அதிகமான பொருட்கள் உள்ளன. அனைத்து பொருட்களின் விலைகளும் நமது பட்ஜெட்டிற்கு ஏற்றபடியே உள்ளன. மேலும், பொருட்கள் அனைத்தும் உலகத் தரம் வாய்ந்தவை. (இது வெறும் வாய் வார்த்தை அல்ல. நமது நிறுவனம் உண்மையிலேயே ஒரு பன்னாட்டு நிறுவனமாகும்.)

4. ம்ம்ம்ம்ம்...சரி... நிறுவனத்தின் பெயர் என்ன?
நமது நிறுவனத்தின் பெயர் "வெஸ்டிஜ் மார்க்கெட்டிங் பிரைவேட் லிமிடெட்" என்பதாகும்.

வெஸ்டிஜ் நிறுவனமானது 2004 ஆண்டு முதல் இயங்கி வருகிறது.

1 comments: